விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோவில்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுவரை சுமார் 40 டாஸ்மாக் கடைகள் கண்டறியப்பட்டு, முதற்கட்டமாக 5 கடைகள் மூடப்பட்டுள்ளன. பட்டியல் வர வர மற்ற கடைகளும் படிப்படியாக மூடப்படும். 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவும் டாஸ்மாக் கூடுதல் கட்டண புகார்கள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பு, டாஸ்மாக் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.