விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய புத்தகத்திருவிழா-2025, 14.11.2025 முதல் 24.11.2025 வரை கே. வி. எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. தெ. கண்ணன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா தலைமையில் நிறைவு நிகழ்ச்சி நடந்தது. 110 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த இந்த விழாவில், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 76,815 பேர் பங்கேற்று, லட்சக்கணக்கான புத்தகங்களை பார்வையிட்டுள்ளனர்.