வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

1பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஓ. சுகபுத்ரா, விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். மீசலூர் கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடையில் பொருட்களின் இருப்பு, தரம், பயனாளிகள் எண்ணிக்கை, வழங்கல் முறை ஆகியவற்றை கேட்டறிந்தார். மேலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர்க்கடன் விவரங்கள், விளைபொருள் கொள்முதல் குறித்தும், த. நா. சீனிவாசா அரசு மேல்நிலைப்பள்ளியில் உணவு, குடிநீர் தரம், சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும் ஆய்வு செய்தார்.