439 மனுக்கள் இன்று பெறப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

397பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த 439 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கினர். இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள், குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகள் குறித்து மனுக்கள் அளிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி