விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு மருத்துக்கல்லூரியில் நடைபெற்ற இந்த போட்டியில், 17-25 வயதினருக்கு 8 கி.மீ, 25 வயதிற்கு மேற்பட்டோருக்கு 10 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.