அரசு மருத்துவக் கல்லூரிக்கு இருக்கைகளை வழங்கிய மருத்துவர்

330பார்த்தது
அரசு மருத்துவக் கல்லூரிக்கு இருக்கைகளை வழங்கிய மருத்துவர்
விருதுநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் என். அரவிந்த் பாபு அவர்களின் தந்தை பேராசிரியர் எஸ். நடராஜன் அவர்களின் நினைவாக, அவரது தாயார் திருமதி. சாந்தகுமாரி அவர்கள் 50 நாற்காலிகளை மருத்துவமனைக்கு வழங்கினார். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் டி. ஜெயசிங் அவர்களிடம் இந்த நாற்காலிகள் ஒப்படைக்கப்பட்டன. நோயாளிகளின் நலன் கருதி இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் என். அன்புவேல், நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ். வைஷ்ணவி மற்றும் உதவி நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் வரதீஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி