விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, 14. 11. 2025 முதல் 24. 11. 2025 வரை நான்காவது விருதுநகர் புத்தகத் திருவிழாவை நடத்துகிறது. இந்த விழா விருதுநகர்-மதுரை சாலையில் உள்ள கே. வி. எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் நடைபெறுகிறது. மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு ஆகியோர் 14. 11. 2025 அன்று மாலை 05. 00 மணியளவில் இதனைத் துவக்கி வைக்க உள்ளனர்.