விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கல்லமநாயக்கன்பட்டி எஸ். எம். எஸ். கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் நடைபெற்ற 36 ஆவது பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா பார்வையிட்டார். மாவட்டத்தின் இலக்கான 36 முகாம்களை பூர்த்தி செய்து சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களை பாராட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா கேடயங்களை வழங்கினார்.