தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு கடந்த 22ஆம் தேதி பொங்கல் சான்றிதழ் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்வுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 28ஆம் தேதி காலை திருப்பள்ளி எழுச்சி, கருங்குழி கூட வேள்வி, நாடி வலி அருள் கூட்டம், தத்துவ வழிபாடு உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.