ராபிபருவ பயிர்களுக்கு பயிர்காப்பீடு செய்ய கடைசி நாள்வரும் 15

2பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில் 2025-26 ராபி பருவத்திற்கான பயிர் காப்பீடு பதிவு செய்வதற்கான கடைசி தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உளுந்து, பாசிப்பயறுக்கு நவம்பர் 15, 2025 வரையிலும், மக்காச்சோளம், கம்பு, துவரை, பருத்திக்கு நவம்பர் 30, 2025 வரையிலும், சம்பா-நெல், சோளம் பயிருக்கு டிசம்பர் 16, 2025 வரையிலும், நிலக்கடலை, சூரியகாந்திக்கு டிசம்பர் 30, 2025 வரையிலும், எள் பயிருக்கு ஜனவரி 31, 2026 வரையிலும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர்களில் கொத்தமல்லிக்கு ஜனவரி 17, 2026, மிளகாய், வெங்காயத்திற்கு ஜனவரி 31, 2026, வாழைக்கு பிப்ரவரி 28, 2026 கடைசி நாட்களாகும். விவசாயிகள் பதிவு விண்ணப்பத்துடன் அடங்கல், வங்கி கணக்கு நகல், ஆதார் நகல் ஆகியவற்றை இணைத்து வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையங்களில் கட்டணம் செலுத்தி இரசீது பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.