கனமழையின்காரணமாக வீடுகளில்மழைநீர் புகுந்ததால்பொதுமக்கள் அவதி

1பார்த்தது
விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 34 மற்றும் 35 வது வார்டுகளில் சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நேற்று நள்ளிரவு பெய்த கன மழையால் 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. நகராட்சி நிர்வாகம் கழிவுநீர் கால்வாயை சுருக்கியதே இதற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் வீடுகளுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சிறுவர்கள், முதியவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர். மிதிவண்டி, காலணிகள் உள்ளிட்ட பொருட்கள் அடித்துச் செல்லப்பட்டன. போதிய அளவிலான கழிவுநீர் கால்வாய் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி