வைகை இலக்கியத் திருவிழா நடைபெற்றது.

304பார்த்தது
விருதுநகர் மாவட்ட நூலக அலுவலர் திருமதி. சி. பாலசரஸ்வதி துவக்க விழாவில் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட வருவாய் அலுவலர் திருமிகு. ரா. ஆனந்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி, வாசிப்புப் பழக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். எழுத்தாளர் டாக்டர். த. அறம் 'நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்' பற்றிப் பேசினார். கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன் கதைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது. திரு. ம. மணிமாறன் 'மதுரையை பாடிய கதைகள்' பற்றிப் பேசினார்.

தொடர்புடைய செய்தி