விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பிப்ரவரி 21 உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தமிழோசை உலகெங்கும் ஒலிக்க உழைப்போம், அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம், குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்வோம், இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என அனைவரும் உளமாற உறுதி கூறினர்.