விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு அரசின் திருமண உதவித்தொகையுடன் திருமணங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் 234 ஏழை, எளிய பெண்கள் ரூ.2.38 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் பெற்றனர். பள்ளிப் படிப்பை முடித்த பெண்களுக்கு நிதியுதவி தொகையாக ரூ.25,000/- மற்றும் பட்டப்படிப்பு பயின்ற பெண்களுக்கு ரூ.50,000/- நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலம் 2024-2025 ஆம் ஆண்டில், காரியாபட்டி, திருச்சுழி, நரிக்குடி, விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர், வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 234 ஏழை, எளிய பெண்கள் ரூ.1.42 கோடி மதிப்பிலான தலா 8 கிராம் தங்க நாணயங்கள், ரூ.95.75 லட்சம் மதிப்பில் திருமண நிதியுதவிகள் என மொத்தம் ரூ.2.38 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் பெற்று பயனடைந்துள்ளனர். இந்த திட்டம் மூலம் பயன்பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு அரசுக்கு நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.