விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி முக்குரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண கணபதி, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ சந்தன கருப்பசாமி திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இன்று திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவில், மழை பெய்து விவசாயம் செழிக்கவும், உலக நன்மை மற்றும் குடும்ப ஒற்றுமை நிலைக்கவும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது.