விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் ஸ்ரீராமலிங்கா மில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் பெற்று திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளது. இதனால், இந்நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகத்தினர் மீது விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள், உரிய அசல் ஆவணங்களுடன் விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கலாம் என காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.