விருதுநகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சத்திரரெட்டியபட்டி மேல்நிலைப்பள்ளி பகுதியில் ஊரக காவல்துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் பிடிபட்ட மூன்று பேரிடம் சோதனை நடத்தியதில் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. உன்னிபட்டியைச் சேர்ந்த ராகுல்குமார் (20), சத்திரரெட்டியபட்டியைச் சேர்ந்த சந்துரு (26), காந்தி நகரைச் சேர்ந்த விக்னேஷ்குமார் (26) ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.