விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவைச் சேர்ந்தவர் சாந்தி. இவருடைய மகன் அருண்குமார் தனது இருசக்கர வாகனத்தில் நரிக்குடி திருப்புவனம் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, வல்லரசு என்ற நபர் ஓட்டிவந்த மற்றொரு இருசக்கர வாகனம் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டிவந்து அருண்குமார் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் காயமடைந்த அருண்குமார் மற்றும் வல்லரசு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி அருண்குமாரின் தாய் சாந்தி அளித்த புகார் அடிப்படையில் முக்குலம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.