விருதுநகர்: தேசிய நெடுஞ்சாலையில் 2 லாரிகள் மோதி விபத்து

791பார்த்தது
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை சிவகாசி மேம்பாலம் அருகில், காங்கேயத்தில் இருந்து விருதுநகருக்கு உளுந்தம்பருப்பு ஏற்றி வந்த லாரி ஒன்று, மதுரையில் இருந்து கோவில்பட்டி நோக்கி பலசரக்குப் பொருட்களை ஏற்றி வந்த லாரியுடன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பலசரக்குப் பொருட்கள் ஏற்றி வந்த லாரியின் இடதுபுறம் பலத்த சேதமடைந்ததுடன், பொருட்கள் சாலையில் சிதறின. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்தி