விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே, சந்தேகத்திற்கிடமான இருசக்கர வாகனத்தை சோதனையிட்டபோது, அது திருட்டு வாகனம் என தெரியவந்தது. தேனியைச் சேர்ந்த செண்பகராஜ் (38) என்பவர், கிருஷ்ணன்கோவில் பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த திருநாவுக்கரசு என்பவரின் இருசக்கர வாகனத்தைத் திருடி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.