விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா, சிவகாசி மாநகராட்சி, திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் கணக்கெடுப்புப் படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணிகளை ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று படிவங்களை வழங்கி வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 15,80,162 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சாத்தூர் தொகுதிகளில் பெறப்பட்ட படிவங்கள் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆட்சியர், அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார்.