கிராம உதவியாளர் சங்கம் மறியல் போராட்டம்

4பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமையில், கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும், இறந்த மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு சி.பி.எஸ். இறுதித் தொகையை வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடங்களில் 50% முன்னுரிமை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சூலக்கரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
Job Suitcase

Jobs near you