விருதுநகர்: பஸ்சில் சிறுமிக்கு தொல்லை.. 52 வயது நபர் கைது

2பார்த்தது
விருதுநகர்: பஸ்சில் சிறுமிக்கு தொல்லை.. 52 வயது நபர் கைது
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், 17 வயது சிறுமியுடன் வேளாங்கண்ணிக்குச் செல்லும்போது, கோவில்பட்டியில் இருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது, திருநெல்வேலி மாவட்டம் உத்திர கோட்டையைச் சேர்ந்த குமாரவேல் (52) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் கூச்சலைக் கேட்டு சக பயணிகள் அவரை அடித்து உதைத்து சாத்துார் மகளிர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சாத்துார் மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி