விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் V. G கணேசன், விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட கச்சேரி ரோடு, ரயில்வே பீட்டர் சாலை, பாவாலி சாலை, புல்லலக்கோட்டை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீதி வீதியாக வீடு வீடாகச் சென்ற அவர், அதிமுகவின் சாதனைகள் மற்றும் தேர்தல் அறிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.