விருதுநகரில் போலீஸ்காரர் கார்த்திகேயன், ஊரக போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் பெண் போலீசுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இது குறித்து கார்த்திகேயனின் மனைவி போலீசில் புகார் அளித்ததால் அந்தப்பெண் கார்த்திகேயனிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். நவ.23 இரவு கார்த்திகேயன் செக் போஸ்ட்டில் பெண் போலீசை மறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கார்த்திகேயன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது எஸ்பி கண்ணன் கார்த்திகேயனுடன் பெண் போலீசையும் சேர்த்து பணியிடை நீக்கம் செய்துள்ளார்.