மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன், 170 தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்றும், கூட்டணி ஆட்சி குறித்தும் பேசியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், "2021ல் 173 தொகுதியில் போட்டியிட்டு 133 வெற்றி பெற்றோம். நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வி அடைந்த இடங்களை தான். அதிகாரப் பகிர்வு அவசியம். ஆட்சிப் பங்கு எங்கள் உரிமை. மக்கள் தீர்மானிப்பார்கள்" என்று தெரிவித்துள்ளார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.