மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் சென்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுடலை (60) என்பவர், ஞாயிற்றுக்கிழமை மலைப் பாதையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சாப்டூர் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.