சிவகாசி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட 21 வயது கட்டடத் தொழிலாளி விக்னேஷ்குமார் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த நிலையில், சிறுமிக்கு குழந்தை பிறந்ததை அடுத்து, ஊர் நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.