மக்கள் நீதி மய்யம் சார்பில், கமல்ஹாசன் அவர்களின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, விருதுநகர் ஒன்றியம் எரிச்சநத்தம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு அரிசி மற்றும் பலசரக்கு பொருட்கள் மாவட்ட செயலாளர் காளி தாஸ் தலைமையில் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் கமல் கண்ணன், மாவட்ட ஆதி திராவிட அணி அமைப்பாளர் பன்னீர், மாவட்ட ஐ. டி பிரிவு அமைப்பாளர் நெல்சன் தாஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். திரளான பொது மக்களும் பங்கேற்றனர்.