விருதுநகர் தேசபந்து மைதானம் முன்பு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணியில் 100க்கும் மேற்பட்ட செவிலியர் மாணவிகள் கலந்துகொண்டு, 'புகையிலை இல்லா கிராமம் உருவாக்குவோம்', 'புகையிலை நோய்க்கு வழி ஆரோக்கியம் வெற்றிக்கு வழி', 'புகையிலை பழக்கத்தை முறியடிப்போம் நோயற்ற சமூகத்தை உருவாக்குவோம்' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.