மதுரை தியாகராசர் கல்லூரியில் நடைபெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக யோகா சாம்பியன்ஷிப் போட்டிகளில், விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரி மாணவர்கள் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த டீம் பட்டத்தை வென்றனர். ஆர்டிஸ்டிக் டீம், டிரெடிசனல், தனிநமின் டிரெடிசனல், ரிதமிக் போன்ற பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில், அபினேஷ்குமார், மணிகண்டன், கவிக்குமார், கெளதம்பாண்டியன், சந்தோஷ்குமார் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்றுனர் பொன்ராஜ் அவர்களையும் கல்லூரித் தலைவர், உபதலைவர்கள், செயலாளர், பொருளாளர், முதல்வர், உடற்கல்வி இயக்குநர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர் பாராட்டினர்.