சிறந்த எழுத்தாளர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

0பார்த்தது
தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் கலை, கலாச்சாரம், இலக்கியத் திறனை மேம்படுத்த, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் 11 சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு தலா ரூ. 1,00,000/- நிதி உதவி உயர்த்தி வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. 2024-2025 ஆம் ஆண்டிற்கான உதவித்தொகைக்கு தகுதியுள்ளோர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகங்கள், ஆணையரகம் அல்லது tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். படைப்புகளை இரு நகல்களிலும் டிஜிட்டல் முறையிலும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 28.11.2025 என மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.