விருதுநகர்: திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெற விண்ணபிக்கலாம்

65பார்த்தது
2025-ஆம் ஆண்டிற்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதானது, திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ம் தேதி தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. 

அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் கீழ்கண்ட தகுதிகளையுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாகவே சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருத்தல் வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும். திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது. இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் (https://awards.tn.gov.in) இணையதளம் மற்றும் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். 

திருநங்கையை அங்கீகரிக்கும் பொருட்டு இவ்விருது வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ரூ.1 இலட்சத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் 10.02.2025 ஆகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், 12.02.2025-க்குள் கருத்துருக்கள் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி மாவட்ட சமூகநலஅலுவலர், மாவட்ட சமூகநலஅலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் 04562-252701 தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி