விருதுநகர்: ரயில் பயணியிடம் நகை பறித்த வாலிபர் கைது

71பார்த்தது
மயிலாடுதுறையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் பயணிகள் ரயிலில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் விஸ்வநாதம் கிராமத்தைச் சேர்ந்த ஐயம்பெருமாள் மகன் கிஷோர் என்பவர் தனது தாய் மாமா வீட்டான மணப்பாறைக்குச் சென்று விட்டு திரும்ப வரும் போழுது வையம்பட்டியில் ஏறிய மதுரை சுந்தரராஜபுரத்தைச் சேர்ந்த துளசிராம் சிங் மகன் சுருஜித் என்பவர் கிஷோர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் இறங்கி ஓடிவிட்டார். 

பின்னர் விருதுநகர் ரயில் நிலையம் வந்து நடந்த சம்பவத்தை பற்றி புகார் அளித்தவுடன் காவல் ஆய்வாளர் திருமதி செல்வி அவர்கள் உடனடியாக வழக்குப் பதிவு செய்து எதிரியை கள்ளிக்குடி ரயில் நிலையம் அருகில் வைத்து ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்து விருதுநகர் மாவட்ட சிறையில் அடைத்தார்கள்.

தொடர்புடைய செய்தி