
சிறப்பு நிவாரணத் தொகை ரூ.9,000 ஆக உயர்வு
மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை ரூ.8,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரணத் தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.9,000 ஆக உயர்த்தப்படும் என்றும் 100 கோடி மீன் குஞ்சு உற்பத்தி செய்வதற்கு தேவையான புதிய மீன் பண்ணைகள் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


























