
இன்று இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
"மோந்தா" புயல் காரணமாக ஏற்படும் கனமழையை முன்னிட்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று (அக்.28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் மழை வெள்ள அபாயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.



























