திமுக 59 தொகுதிகளில் வெற்றி பெற்றதில் விசிகவின் பங்கு உள்ளது, ஆனால் அதை யாரும் பேச மாட்டார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விசிக தலைவர், தீர்மானிக்கும் சக்தியாக விசிக இருப்பதால் பலரும் ஆதங்கப்படுகின்றனர். விசிகவுக்கு முக்கியத்துவம் கிடைத்ததை பலரும் ஏற்க மறுக்கின்றனர். விசிக இருக்கும் கூட்டணியை உடைக்கவும், அந்த இடத்தை அடையவும் சிலர் முயற்சிக்கின்றனர். வயிற்றெரிச்சல் காரணமாக நோபல் பரிசு வரை பேசுகின்றனர் என்றார். வைகோவை திருமா மறைமுகமாக சாடியுள்ளார்.