உற்சாகத்துடன் வாக்களியுங்கள் - பிரதமர் மோடி

4957பார்த்தது
உற்சாகத்துடன் வாக்களியுங்கள் - பிரதமர் மோடி
பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (நவ., 06) நடைபெறும் நிலையில், மக்கள் உற்சாகத்துடன் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். அவரது எக்ஸ் பதிவில், முதல்முறையாக வாக்களிக்கப்போகும் அனைத்து இளைஞர்களுக்கும் சிறப்பு வாழ்த்துகள். நினைவில் கொள்ளுங்கள் - முதலில் வாக்களித்துவிட்டு, பின் புத்துணர்ச்சி பெறுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைக்குமா? என்பது வரும் நவ., 14ஆம் தேதி தெரியவரும்.

தொடர்புடைய செய்தி