தமிழ்நாட்டில் கடந்த 4-ஆம் தேதி முதல், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அக்டோபர் 27 நிலவரப்படி, 6 கோடியே 41 லட்சத்து 14,587 வாக்காளர்களுக்கு 95.58% படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் 10 லட்சத்து 21,578 வாக்காளர்களுக்கு 94.97% படிவங்கள் வழங்கப்பட்டு, 39.65% பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.