தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி இன்று (நவ.6) தொடங்கியது. வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்களை கொடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திரும்பப் பெற்று வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியின் நிலை அலுவலர் யார் என்பதை தெரிந்து கொள்ள https://erolls.tn.gov.in/blo/ என்ற இணையதள முகவரியை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.