அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்., 09) நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் இறுதிகட்ட வாக்குசேகரிப்பு நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதனிடையே வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. அதே போல், கோவா, கர்நாடகா, நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நாளை நடக்கிறது.