சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மே.22) முதலமைச்சர் விஜயை, விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேசியுள்ளார். விசிக எம்எல்ஏ வன்னி அரசு அமைச்சராக பதவியேற்ற நிலையில் விஜயுடன் திருமாவளவன் சந்தித்துள்ளார். முன்னதாக தவெக ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். அதனைத் தொடர்ந்து, தற்போது அமைச்சரவையில் பங்கு கொடுப்பதாக தவெக கூறிய நிலையில், அதற்கு திருமாவளவன் ஒப்புக்கொண்டார்.