ஸ்பேம் அனுப்புவோருக்கு எச்சரிக்கை: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நடவடிக்கை

3309பார்த்தது
ஸ்பேம் அனுப்புவோருக்கு எச்சரிக்கை: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நடவடிக்கை
செல்போனில் தொடர்ந்து வரும் தேவையற்ற விளம்பர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய அரசு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. ஏ.ஐ. மூலம் தேவையற்ற தகவல்களை அனுப்புபவர்களைக் கண்டறிந்து, தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் அவர்களின் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்படும். பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா, பி.எஸ்.என்.எல். ஆகிய நிறுவனங்கள் ஏ.ஐ. அடிப்படையிலான ஸ்பேம் கண்டறியும் அமைப்புகளை செயல்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்தி