டெங்கு பரவலை தடுக்க போர்க்கால நடவடிக்கை.. தமிழக அரசு உத்தரவு

41பார்த்தது
டெங்கு பரவலை தடுக்க போர்க்கால நடவடிக்கை.. தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக தனி வார்டுகள் அமைக்கவும், தேவையான அளவு மருந்துகள் மற்றும் ரத்தத் தட்டணுக்கள் 24 மணி நேரமும் கிடைப்பதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சுகாதாரத் துறை ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி