சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் சந்தித்தபோது, அதிகாரி ஒருவர் ரீல்ஸ் எடுத்ததாக எழுந்த சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வீடியோ எடுத்தவர் அரசு அதிகாரி அல்ல, மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சிம்மச்சந்திரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும், முதலமைச்சர் விஜய்யின் உரிய அனுமதி பெற்ற பிறகே அந்த வீடியோவை எடுத்ததாக சிம்மச்சந்திரன் விளக்கியுள்ளார்.