தவெக தலைவர் விஜய் ஹெலிகாப்டரில் பரப்புரை நடத்த இருப்பதாக வெளியான தகவல்களுக்கு அக்கட்சியின் நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார். சென்னையில் இன்று (அக்.29) செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், "கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்தது தனிப்பட்ட சந்திப்பு. அதை அரசியலாக்க விரும்பவில்லை. தவெகவை முடக்க பலர் முயற்சி செய்கின்றனர்" என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தமிழக அரசு நடத்தும் SIR தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு தவெகவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.