தூய்மைப் பணியாளர்கள்
போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுந்தது. அதற்கு, தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிப்பதாகவும், அவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் பதிலளித்தார். இந்நிலையில், சட்டப்பேரவையில் அப்படி பேசி ஒரு மாயையை ஏற்படுத்துவதாக உழைப்போர் உரிமை இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நன்றி: சன்நியூஸ்