மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 11,988 கனஅடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 18,905 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 74.01 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் தற்போது 74.55 அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நிலவரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.