30 வயதை தாண்டியும் தனக்கு திருமணம் நடக்கவில்லை என்று அவர் பிக் பாஸ் திவாகர் கூறி வருகிறார். இந்நிலையில், திவாகருக்கு திருமணம் நடந்ததாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அப்புகைப்படத்தில் திவாகர், கோட் சூட் போட்டுக்கொண்டு, கழுத்தில் மாலை அணிந்து கொண்டு ஒரு பெண்ணுக்கு அருகில் நிற்கிறார். அவர்களுக்கு பின்னால் திருமண மேடை பேக்கிரவுண்டில் 2018ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 4ஆம் தேதி என்று எழுதப்பட்டிருக்கிறது.