கேரளா மாநிலம் வயநாடு அருகே கல்லாடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாயமானவர்களில் மேலும் ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கல்லாடி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புப் படையினர் தொடர்ந்து முகாமிட்டு, மண்ணில் புதையுண்டு காணாமல் போன எஞ்சிய 4 பேரைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.